TNPSC Thervupettagam

ஸ்வச் ஜல் சே சுரக்சா பிரச்சார அறிக்கை

June 7 , 2023 412 days 247 0
  • மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஜல் ஜீவன் மிஷன்: ஸ்வச் ஜல் சே சுரக்சா (SJSS) என்றப் பிரச்சாரத்தின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை (UTs) முதன்மைப்படுத்தி நீரின் தர கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வலியுறுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரத்தின் போது கிடைக்கப் பெற்ற 90.34% அளவிலான மாசுபட்ட மாதிரிகளை மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது.
  • தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்