TNPSC Thervupettagam

ஸ்வச் வாயு சர்வேக்சன்

October 3 , 2022 659 days 297 0
  • தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் கீழ் ‘ஸ்வச் வாயு சர்வேக்சன் - நகரங்களின் தர வரிசை’ குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 2025-26 ஆம் ஆண்டிற்குள் காற்று மாசுபாட்டை 40% வரை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்று திட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட நகரச் செயல் திட்டங்களை செயல்படுத்துவதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 131 நகரங்களைத் தரவரிசைப் படுத்த இந்த வழிகாட்டுதல்கள் உதவுகிறது.
  • இந்த 131 நகரங்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் மூன்று குழுக்களாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் குழுவில், 47 நகரங்கள் உள்ளன.
  • 3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது குழுவில் 44 நகரங்கள் உள்ளன.
  • 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மூன்றாவது குழுவில் 40 நகரங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்