TNPSC Thervupettagam

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்

August 17 , 2018 2297 days 986 0
  • ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் முதல் திட்டமாக ‘வடகிழக்கு சுற்று : இம்பால் மற்றும் கொங்க்ஜோம்’ ஆனது மணிப்பூரில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டமானது மணிப்பூரின் காங்லா கோட்டை மற்றும் கொங்க்ஜோம் ஆகிய இரண்டு தளங்களை உள்ளடக்கியது.
  • இத்திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.
  • இத்திட்டமானது மத்திய சுற்றுலாத்துறையால் கருத்துறு அடிப்படையிலான சுற்றுலா சுற்றுப் பாதைகளை  மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • இது பொதுநிதிக்காக மேற்கொள்ளப்படும் திட்ட கூறுகளுக்கான 100% மத்திய  நிதியுதவி திட்டமாகும்.
  • மேலும் இது பெரு நிறுவன சமூக பொறுப்பின் கீழ் தன்னார்வ நிதிக்கான வசதியை அளிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
  • காங்லா கோட்டையானது கடந்த கால மணிப்பூர் மீட்டீ ஆட்சியாளர்களின் பாரம்பரிய இருக்கையாக 1891ஆம் ஆண்டு வரை இருந்துள்ளது.
  • மணிப்பூரின் இம்பால் நகரில் உள்ள பழைய கோவித்தாஜீ கோவில் மிகப்பெரிய இந்து, வைணவ கோவிலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்