TNPSC Thervupettagam
May 9 , 2018 2391 days 1393 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘ஸ்வயம்’ எனும் முன்முயற்சியை துவங்கியுள்ளது. MOOC (Massive Open Online Course) எனப்படும் மிகையான திறந்தநிலை இணையதள படிப்புத் தளமான ஸ்வயத்தினைப் பயன்படுத்தி5 மில்லியன் உயர்கல்வி ஆசிரியர்களின் தகுதிமுறையை இணையதளவழியில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இதன் முதல் கட்ட செயலாக்கத்தின் கீழ் 75 துறை சார்ந்த தேசிய வள மையங்கள் (Discipline-specific National Resource Centres) அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • மத்தியப் பல்கலைக்கழகங்களில் அமைந்துள்ள ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் மீதான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பண்டிட் மதன் மோகன் மாளவியா தேசியத் திட்டத்தின் கீழ் வரும் மையங்கள், IISCS, IUCAA, IITs, IISERs, NITs, மாநில பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் மனிதவள மேம்பாட்டு மையங்கள், தொழில்நுட்ப ஆசிரியர்களின் பயிற்சிக்கான தேசிய நிறுவனங்கள் (National Institutes for Technical Teachers Training - NITTTR), IIITs, திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை தேசியவள மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஸ்வயம் (Study Webs of Active Learning for Young Aspiring Minds – SWAYAM) என்பது 9-ஆம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்புகள் வரையில் அனைத்து விதமான படிப்புகளையும் கொண்டிருத்தல், வகுப்பறையிலேயே பாடம் கற்றுத்தருதல் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருகின்ற உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப தளமாகும்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்