ஆள்கடத்தலை தடுப்பதற்கான முயற்சியில் மேற்குவங்க அரசானது மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஸ்வயாங்க்சித்தா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தற்சார்புடைமை எனும் பொருள்படும் ஸ்வயாங்க்சித்தா ஆனது மேற்குவங்க காவல்துறையால் செயல்படுத்தப்படும்.
இத்திட்டமானது இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தேர்ந்தெடுப்பதற்கான தகவல்களை அளிக்க அதிகாரமளிக்கிறது. இதனால் அவர்கள் கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களால் குறைவாக பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB -National Crime Records Bureau) தரவரிசைப்படி, மேற்குவங்க மாநிலத்தில் மற்ற மாநிலங்களை விட கடத்தல் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.