அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுவின் கீழ் இயங்கும் பெங்களூருவை மையமாகக் கொண்ட தேசிய விண்வெளி ஆய்வகங்கள் நிறுவனம் ஸ்வஸ்த் வாயு என்ற பெயரில் ஒரு பைபாப் (BiPAP) செயற்கை சுவாசப் பெருக்கி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.
கோவிட் -19 நோயின் தீவிர தாக்குதலிற்கு உட்படாத மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படாத நோயாளிகளுக்குப் பயன்படும் இது உடலின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும் ஒரு சுவாச ஆதரவு சாதனமாகும்.
பைபாப் என்பது (BiPAP - Bilevel Positive Airway Pressure) ஒரு வகை நேர்மறை அழுத்த சுவாசக் கருவியாகும்.
இது 36 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆக்ஸிஜன் செறிவூட்டியை வெளிப்புறமாக இணைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த செயற்கை சுவாசக் கருவி சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) அங்கீகரிக்கப் பட்டுள்ளது.