TNPSC Thervupettagam

ஸ்விகி மற்றும் சோமாட்டோ

May 10 , 2019 2028 days 707 0
  • இடப்பெயர்வு தொழிலாளர்களுக்கான ஒரு முன்னணி நகரமாக தில்லி உருவெடுத்துள்ளது. இவர்கள் இந்தியாவின் தற்காலிக (நிலையற்ற - gig economy) பொருளாதாரத்துடன் இணைந்துள்ளனர். இதில் பெங்களுரு நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • 2018 – 19 ஆம் நிதியாண்டின் கடைசி 6 மாதத்தில் தில்லி மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்கள் முறையே 5,60,600 மற்றும் 2,52,300 மக்களை தனது நிலையற்றப் பொருளாதாரத்தில் இணைத்துள்ளது.
  • நிலையற்றப் பொருளாதாரமானது உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி, சோமாடோ மற்றும் வாடகை மகிழுந்து நிறுவனங்களான உபேர், ஒலா ஆகியவற்றினால் நடைபெறுகின்றது.
பணிகள்
  • நிலையற்றப் பொருளாதாரத்தில் தற்காலிக மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட பணிகள் ஆகியவை பொதுவான பணிகளாகும்.
  • நிறுவனங்கள் முழு நேரப் பணியாளர்களுக்கு மாற்றாகத் தனித்து செயல்படக் கூடிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்துகின்றன.
  • பணியாளர்கள் சிறிய அளவிலான பணிப் பாதுகாப்பு மற்றும் குறைந்த அளவிலான பயன்கள் ஆகியவற்றுடன் பணியாற்றுகின்றனர்.
  • இது மிக அரிதாகப் பணியிடம் மாறுகின்ற மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கின்ற முழு நேரப் பணியாளர்களின் பாரம்பரியப் பொருளாதாரத்தை வலுகுன்றச் செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்