இடப்பெயர்வு தொழிலாளர்களுக்கான ஒரு முன்னணி நகரமாக தில்லி உருவெடுத்துள்ளது. இவர்கள் இந்தியாவின் தற்காலிக (நிலையற்ற - gig economy) பொருளாதாரத்துடன் இணைந்துள்ளனர். இதில் பெங்களுரு நகரம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2018 – 19 ஆம் நிதியாண்டின் கடைசி 6 மாதத்தில் தில்லி மற்றும் பெங்களுரு ஆகிய நகரங்கள் முறையே 5,60,600 மற்றும் 2,52,300 மக்களை தனது நிலையற்றப் பொருளாதாரத்தில் இணைத்துள்ளது.
நிலையற்றப் பொருளாதாரமானது உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி, சோமாடோ மற்றும் வாடகை மகிழுந்து நிறுவனங்களான உபேர், ஒலா ஆகியவற்றினால் நடைபெறுகின்றது.
பணிகள்
நிலையற்றப் பொருளாதாரத்தில் தற்காலிக மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்ட பணிகள் ஆகியவை பொதுவான பணிகளாகும்.
நிறுவனங்கள் முழு நேரப் பணியாளர்களுக்கு மாற்றாகத் தனித்து செயல்படக் கூடிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாளர்களை அதிக அளவில் பணியமர்த்துகின்றன.
பணியாளர்கள் சிறிய அளவிலான பணிப் பாதுகாப்பு மற்றும் குறைந்த அளவிலான பயன்கள் ஆகியவற்றுடன் பணியாற்றுகின்றனர்.
இது மிக அரிதாகப் பணியிடம் மாறுகின்ற மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கின்ற முழு நேரப் பணியாளர்களின் பாரம்பரியப் பொருளாதாரத்தை வலுகுன்றச் செய்கின்றது.