உலகளாவிய அளவில் பெண்களின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக நாட்டின் முதன்மை அணுகுமுறையை முன்னிலைப்படுத்த ஸ்வீடன் நாடு ‘பெண்ணிய வெளியுறவுக் கொள்கை’ கையேட்டை வெளியிட்டுள்ளது.
2014ல் துவக்கப்பட்டதிலிருந்து இது ஸ்வீடன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மார்கோட் வால்ஸ்ட்ராமின் தலைமையில் நடத்தப்படுகிறது.
பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், பாலியல் வன்முறைகளுக்கெதிராக போராடுதல் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பை மேம்படுத்துதல் ஆகியவை இக்கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
இது போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லைபீரியா மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் ஆகிய 5 நாடுகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைத் திட்டங்களை உள்ளடக்கியது.
ஸ்வீடனின் பெண் தூதர்களின் எண்ணிக்கை 1996-ல் வெறும் 10 சதவீதத்திலிருந்து 2016-ல் 40 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.