TNPSC Thervupettagam

ஸ்வீடன் நிறுவனம் சாப் உடனான BEL-ன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of understanding - MoU)

July 21 , 2018 2190 days 643 0
  • L - அலை முப்பரிமாண வான்வெளி கண்காணிப்பு ரேடாரினை (RAWL-03) சாப் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக விற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு மின்னணு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL - Bharat Electronics ltd) கையெழுத்திட்டுள்ளது.
  • வான்வெளி கண்காணிப்பு ரேடார் RAWL-03 என்பது நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
  • RAWL-03 வான் மற்றும் மேற்பரப்பு இலக்குகளை முன்கூட்டியே கண்டறிதலுக்கான மற்றும் கண்காணிப்பதற்கான நீண்ட வரம்பெல்லையைக் கொண்ட வான்வெளி கண்காணிப்பு ரேடார் ஆகும்.
  • கடல் மற்றும் நிலம் சார்ந்த கட்டமைப்புகளிலும் இதனைப் பொருத்த முடியும். இந்த அமைப்பு GaN TR தொகுதி தொழில்நுட்ப கலையின் அடிப்படையில் அமைந்ததாகும்.
  • BEL என்பது அரசுக்கு சொந்தமான முன்னணி பாதுகாப்பு மின்னணு நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள 9 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • இது நவரத்தின தகுதிநிலையினைப் பெற்றுள்ளது. இதன் தலைமையிடம் கர்நாடகாவிலுள்ள பெங்களூருவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்