TNPSC Thervupettagam

ஹங்கேரி மற்றும் ICC

April 12 , 2025 11 days 61 0
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகுவதாக அறிவித்து உள்ளது.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையின் கீழ் தேடப்படும் இஸ்ரேலியத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு முறைப் பயணமாக ஹங்கேரிக்கு வந்தார்.
  • இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உள்ளது.
  • ஹங்கேரி நாடானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஸ்தாபன உறுப்பினராகும் என்பதோடு இது அதிலிருந்து வெளியேறும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாகவும் மாற உள்ளது.
  • இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக இல்லாத நாடுகளில் அடங்கும் என்பதால் அவை அதன் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்