அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹங்கேரி நாட்டின் பிரதமரான விக்டர் ஆர்பன் (Viktor Orban) தொடர்ந்து மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
199 இடங்களைக் கொண்ட ஹங்கேரி பாராளுமன்றத்தில் அவருடைய வலது சாரி பிடெஸ் கட்சி (Fidesz party) 134 இடங்களை வென்றுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரி தேர்தலில், பிற தேசியக் கட்சிகளான ஜோபிக் கட்சி (Jobbik Party) 25 இடங்களையும், சோஷியலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களையும் வென்றுள்ளன.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக விக்டர் ஆர்பன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார்.
அதாவது அரசியலமைப்பு சட்ட விதிகளை மாற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
1989-ஆம் ஆண்டு ஹங்கேரியில் கம்யூனிஸம் வீழ்ந்ததிலிருந்து, ஹங்கேரி நாட்டினுடைய நீண்ட காலம் ஆட்சி புரிந்து வரும் தலைவர் விக்டர் ஆர்பன் ஆவார்.