வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு (MEA) பதிலாக சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் ஆனது ஹஜ் குழுவிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாக தேர்வு செய்யப் பட்டு உள்ளது.
முன்னதாக, 2002 ஆம் ஆண்டு ஹஜ் குழுச் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் நிர்வாகம் உட்பட, ஹஜ் யாத்திரை மேலாண்மை தொடர்பானப் பணிகள் வெளியுறவு அமைச்சகத்தினால் கையாளப்பட்டது.
இந்த விதிகளை ஹஜ் குழு (திருத்தம்) விதிகள், 2024 என்று அழைக்கலாம்.
2002 ஆம் ஆண்டு ஹஜ் குழு விதிகளில், 'வெளியுறவு அமைச்சகம்' என்ற சொல்லிற்குப் பதிலாக, 'சிறுபான்மை விவகார அமைச்சகம்' என்ற சொற்கள் மாற்றப்படும்."