TNPSC Thervupettagam

ஹஜ் புனிதப் பயணம்

January 10 , 2018 2510 days 834 0
  • 1995-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட, ஹஜ் புனித யாத்திரைக்கான கடல்வழி பயணத்தை மீண்டும் துவங்குவதற்கான இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது
  • இது தொடர்பாக இந்திய அரசும், சவூதி அரேபிய அரசும் மெக்கா நகரில் வருடாந்திர ஹஜ் பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்தியாவின் புதிய ஹஜ் பயணக் கொள்கையின் படி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் துணையின்றி (Mehram) தனியே ஹஜ் பயணம் மேற்கொள்ள முதல் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • நான்கு அல்லது 5 பெண்களுடைய குழுவாக பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் புனித யாத்திரைக்கான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • ஹஜ் புனிதயாத்திரைக்காக கடல் வழியே கப்பல்கள் மூலமாக மும்பையிலிருந்து ஜெட்டா நகருக்கு செல்லும் கடல்வழி போக்குவரத்தானது 1995ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
  • புனித யாத்திரைக்கான கடல் வழிப் பயணமானது கணிசமான அளவில் பயண செலவை குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்