ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலவச தங்கும் அறை – சவுதி அரேபியா
August 19 , 2018
2291 days
696
- மினா நகரத்தில் ஹஜ் யாத்ரீகர்களுக்காக இலவச தங்கும் அறைகளை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது.
- நூற்றாண்டு பழமையான ஹஜ் யாத்திரையை புதுப்பிக்கும் விதமாக சவுதி அரேபியா இந்த இலவச தங்கும் அறையை வெளியிட்டுள்ளது.
- இதன் நோக்கம் ஹஜ் பயணத்தின் போது வெளி விடுதிகளில் தங்க இயலாதவர்களுக்காக, இலவச ஓய்வு அறையை எற்படுத்தித் தருவதாகும்.
- இது கூட்டமான இடங்களில் ஓய்வறைகளின் பகுதிகளை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியாகும்.
- ஜப்பானின் புகழ்பெற்ற ‘கேப்சூல் விடுதிகளின்’ உத்வேகத்துடன் சவுதி அரேபியா இந்த ஓய்வு அறையை உருவாக்கியுள்ளது.
- மேலும் அரசாங்கமானது நிகழ் இடத்திலேயே மொழிபெயர்ப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக செயலியை உருவாக்கியுள்ளது.
Post Views:
696