புனேவில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையத்தைச் சேர்ந்த ஆராயச்சியாளர்கள் நோயுண்டாக்கும் ஹண்டிங்டின் புரதமானது உயிரணுக்களின் ஒட்டு மொத்த புரத உற்பத்தியைக் குறைக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஹண்டிங்டின் நோய் என்பது ஒரு அதிகரிக்கும் மரபணுப் பிரச்சினையாகும்.
இது மூளையைப் பாதித்து, பின்வருவனவற்றை ஏற்படுத்துகின்றது.
கட்டுப்பாடற்ற இயக்கங்கள்,
சமநிலை மற்றும் இயக்கத்தின் பலவீனமான ஒத்துழைப்பு
அறிவுத் திறன் குறைதல்
கவனம் செலுத்துதலில் கடினத் தன்மை மற்றும் நினைவு இழப்பு
கட்டுப்பாடற்ற மனநிலை
ஆளுமை மாற்றம்
இது HTT மரபணு (ஹண்டிங்டின் மரபணு) என்று அழைக்கப்படும் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஏற்படுகின்றது.
HTT மரபணுக்கள் ஹண்டிங்டின் என்று அழைக்கப்படும் புரதத்தின் உற்பத்தியில் பங்கு கொள்கின்றன.
இவை புரதத்தை உருவாக்குவதற்கான அறிவுரைகளை வழங்குகின்றன.
இந்த மரபணுக்கள் மாற்றம் பெற்றால், இவை தவறான அறிவுரைகளை வழங்கி அசாதாரண ஹண்டிங்டின் புரத உற்பத்திக்கு வழி வகுக்கும். பின்னர் இவை உருவமற்றவைகளாக மாறுகின்றன.
இந்த உருவமற்ற அமைப்புகள் மூளை உயிரணுக்களின் வழக்கமானச் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. இவை மூளையில் உள்ள நரம்புகளின் செயலிழப்பிற்கு வழி வகுக்கும். இதன் காரணமாக ஹண்டிங்டின் நோய் ஏற்படுகின்றது.