TNPSC Thervupettagam

ஹதே மிளகாய் மற்றும் நமேங்லாங் மாண்டரின் ஆரஞ்சு

September 22 , 2021 1069 days 547 0
  • மணிப்பூர் மாநிலத்தின் புகழ்பெற்றத் தயாரிப்புகளான, தனித்துவமிக்கச் சுவைக்கு பெயர் பெற்ற உக்ரூல் மாவட்டத்தில் காணப்படுகின்ற ஹதே மிளகாய் மற்றும் தமேங்லாங் மாண்டரின் ஆரஞ்சு ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.
  • ஹதே மிளகாயானது ஒரு நல்ல எதிர் ஆக்சிகரணியாகச் செயல்படுவதோடு இது  கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றையும் அதிகளவில் கொண்டுள்ளது.
  • இது அமெரிக்க மசாலா வர்த்தகச் சங்கத்தின் மிக உயரிய வண்ண மதிப்பீட்டினைக் (164) கொண்டுள்ளது.
  • இந்த மிளகாயிலிருந்துப் பிரித்தெடுக்கக் கூடிய நிறம் பொதுவாக ASTA சங்கத்தின் மதிப்பீடுகளைக் கொண்டு வெளியிடப்படுகிறது.
  • தமேங்லாங் மாண்டரின் ஆரஞ்சு அதன் அளவில் மிகப் பெரியதாகும்.
  • இது ஒரு தனித்துவமான இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையினைக் கொண்டது.
  • இதில் அதிகளவு சாறு நிறைந்துள்ளதோடு (சுமார் 45%) இதில் அஸ்கார்பிக் அமிலம் (48.12 மில்லிகிராம்/100 மி.லி) அதிகளவில் நிறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்