ஹன்சா - அடுத்த தலைமுறை நுட்பத்திலான பயிற்சி விமானம்
April 8 , 2025 12 days 64 0
வணிக ரீதியான விமானி (வானூர்தி ஓட்டுநர்) உரிமத்திற்காக (CPL), உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் HANSA-3 (NG) பயிற்சி விமானத்தின் தொழில்நுட்பப் பரிமாற்றத்தினை (ToT) மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
இது அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான, இரண்டு இருக்கைகள் கொண்ட, வானூர்தி ஒட்டுநர் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட முதல் கட்டப் பயிற்சி விமானமாகும்.
இது பெங்களூருவில் உள்ள CSIR-தேசிய விண்வெளி ஆய்வகங்களால் (NAL) உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது.