குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், 'ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்' என்ற ஓர் ஆண்டு கால நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகள் மீது இந்தியா கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், தேசத்தைப் பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதையும் இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாடு தழுவிய முன்னெடுப்பானது, அரசியலமைப்பு கட்டமைப்பில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள கொள்கைகளை நிலை நிறுத்தச் செய்வதற்கான பெருமை மற்றும் பொறுப்புணர்வு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.