TNPSC Thervupettagam

ஹமேஷா விஜாயி இராணுவப் பயிற்சி

December 21 , 2017 2560 days 893 0
  • இராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவானது (Southern Command) “ஹமேஷா விஜாயி“ எனும் முக்கியப் பயிற்சியை இராஜஸ்தானின் பாலைவனங்களில் 2017ஆம் ஆண்டின் டிசம்பர் 16 முதல் 22 வரை மேற்கொண்டன.
  • இராணுவப் படைகளின் போர் தயார்தன்மையை உறுதி செய்வதற்காக, எதிரிகளின் பிரதேசங்களை தாக்குவதில் இந்திய இராணுவ ஆயுதப் படைகளின் திறன்கள் மற்றும் வலிமையை மதிப்பிடுவதற்கு வேண்டி இந்த இராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது.
  • இராணுவத்தின் தெற்குப் படைப் பிரிவின் தலைமையகமானது புனேவில் உள்ளது. இந்திய இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட இப்பிரிவானது 1895-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
  • இரண்டாம் உலகக் போர் சமயத்தில் தெற்கத்தியப் பிரிவானது 1942-ல் தெற்கத்திய இராணுவமாக (Southern Army) சீரமைக்கப்பட்டது. பின் 1945ஆம் ஆண்டு மீண்டும் இராணுவத்தின் தென் படைப்பிரிவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்