TNPSC Thervupettagam
July 10 , 2021 1144 days 489 0
  • இது ஓரு மீத்தேன் உருவாக்க எதிர்ப்பு இணைத் தீவனமாகும்.
  • இது பெங்களூருவிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கால்நடை ஊட்டச்சத்து மற்றும் உடலியல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதனைத் தீவனமாக வழங்கும் போது அவற்றினால் உமிழப் படும் மீத்தேன் அளவினை 17% முதல் 20% வரை இது குறைக்கிறது.
  • மேலும் இது அதிக பால் உற்பத்தி மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பயன்களையும் தருகிறது.  
  • மீத்தேனானது கால்நடைகளின் வயிற்றில் இருக்கும் நான்கு பாகங்களில் முதல் பாகமான ரூமெனைக் கொண்டுள்ள விலங்குகளினால் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • ஹரித் தாரா தீவனமானது டேனின் அதிகம் உடைய (tannin-rich) செறிவூட்டப்பட்ட மற்றும் நீராற் பகுப்பிற்கு உட்படும் (hydrolysable) தாவரம் சார்ந்த மூலங்களை கொண்டு தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்