மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது ஹரித் தீபாவளி - ஸ்வஸ்த் தீபாவளி என்ற பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதை, குறிப்பாக காற்று மாசுபாட்டைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017-2018ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரமானது குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் பட்டாசுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் அவர்களை தீபாவளி கொண்டாடிட ஊக்கப்படுத்தவும் உருவாக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சாரமானது இந்த வருடம் ‘கிரீன் குட் டீட்’ (Green Good Deed) என்ற இயக்கத்துடன் இணைந்துள்ளது.