TNPSC Thervupettagam

ஹரிமவ் சக்தி 2018

April 28 , 2018 2406 days 703 0
  • இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையேயான இரு தரப்பு கூட்டுப் போர் பயிற்சியான ஹரிமவ் சக்தி பயிற்சி (HARIMAU SHAKTI) 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியிலிருந்து மே 13-ஆம் தேதி வரை இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின்    ஒரு பகுதியாக மலேசியாவின் ஹீலு லாங்கட் (Hulu Langat)  பகுதியில் உள்ள சென்காய் பெர்டிக்  அடர்வனங்களில் நடைபெற உள்ளது.
  • தற்போது முதல்முறையாக இந்தியா மற்றும் மலேசிய இராணுவ வீரர்கள் பங்கேற்கும் இந்த கூட்டுப் போர் பயிற்சியானது  மலேசியாவில் நடைபெற உள்ளது.
  • கிளர்ச்சி எதிர்ப்பு போர்முறைகளிலும் (counter insurgency warfare), பொதுவான இராணுவ செயல்பாடுகளிலும் பெரும் செயல்பாட்டு அனுபவமுடைய இந்தியாவின் மிகவும் பழமையான காலாட் படைப் பிரிவான  நான்கு கிரேனேடியர்கள் (4 GRENADIERS)  படைகள் மூலம் இந்தியப்  படையானது  இந்தக் கூட்டுப் போர் பயிற்சியில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும் .
  • வன போர் முறைகளில் (Jungle Warfare) மாபெரும் அனுபவத்தை கொண்ட தனால் அறியப்படும் மலேஷியாவின் ராயல் மலாய் படைப்பிரிவு  (Royal Malay Regiment),  ராயல் ரான்ஜெர் படைப்பிரிவைச் (Royal Ranjer Regiment)  சேர்ந்த  வீரர்கள் மூலம்  மலேசிய ராணுவப் படை   இந்தக் கூட்டுப் போர் பயிற்சியில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்