பரிதாபாத், குருகிராம், கிஸர், யமுனாநகர் மாவட்டங்களில் ஹரியானா அரசு, அந்தியோதயா ஆஹார் யோஜனா (Antyodaya Aahaar Yojana) திட்டத்தின் கீழ் மானிய விலை உணவகங்களைத் திறந்துள்ளது.
இந்த உணவகங்கள் பத்து ரூபாய் விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும்.
இந்தத் திட்டம், ஹரியானாவிலுள்ள பஞ்ச்குலா என்னுமிடத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தொடங்கப்பட்டது.
அதிகாரப் பூர்வமாக வறுமைக் கோட்டிற்குக் கீழாக வகைப்படுத்தப்பட்ட ஏழைகள் மற்றும் வீடில்லாதவர்களுக்கு குறைந்த மற்றும் மலிவான விலையில் நல்ல தரமான, ஆரோக்கியமான உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டது.