நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் உயிரி வேதியியலாளரான ஹர் கோபிந்த் கோரானாவின் 96வது பிறந்த நாளை ஒட்டி பிரபல இணைய தேடு பொறியான கூகுள் டூடுளை வடிவமைத்து அவருக்கு சிறப்பு செய்துள்ளது.
முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவின் ராஜ்பூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள கபிர்வாலாவில்) 1922 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஹர்கோபிந்த் கோரோனா பிறந்தார்.
1970 களில் டாக்டர் கோரானா உலகின் முதல் செயற்கை மரபணுவை கட்டமைத்தார்.
1978 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராகவும் கோரோனா தேர்வு செய்யப்பட்டார்.
இவர் பத்ம விபூஷண் விருதினையும் பெற்றுள்ளார்.
மரபணுக் குறியீட்டமைவைப் (Genetic codes) பற்றிய விளக்கத்திற்காகவும், புரதத் தொகுப்பில் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி விளக்கியதற்காகவும் 1968-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசினை கோரோனோ, ராபர்ட்ஹோல்லோ மற்றும் மார்ஷல் W.நிரேன் பேர்க் ஆகியோர் அடங்கிய குழு பெற்றது.
நொதிகளின் உதவியுடன் வேறுபட்ட RNA சங்கிலிகளை வடிவமைப்பதை மையமாகக் கொண்டு கோரோனாவின் அனைத்து ஆராய்ச்சிகளும் அமைந்தன.
இந்த நொதிகளைப் பயன்படுத்தி அவர் புரதங்களை உற்பத்தி செய்தார்.
தன்னுடைய DNA மீதான விரிவுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சிக்காகவும், உலகில் முதன் முறையாக செயற்கை மரபணுவைக் கட்டமைத்ததற்காகவும் உலக அளவில் கோரோனா அறியப்படுபவராக விளங்குகிறார்.