TNPSC Thervupettagam

ஹலோ உஜ்ஜீவன் செயலி

February 18 , 2023 645 days 388 0
  • உஜ்ஜீவன் சிறு கடன் வங்கியானது, இந்தியாவிலேயே முதல் முறையாக 3 V - அதாவது குரல் சார்ந்த, காட்சி சார்ந்த, வட்டார மொழி மூலம் இயங்கக் கூடிய அம்சங்களுடன் கூடிய ஹலோ உஜ்ஜீவன் எனப்படும் கைபேசி சார்ந்த வங்கிச் சேவைச் செயலியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • குறைந்த வாசிப்புத்திறன் மற்றும் எழுதும் திறன் கொண்ட தனிநபர்களுக்கு வங்கி அணுகலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறு வங்கிச் சேவை மற்றும் எண்ணிம ரீதியில் சவால்கள் நிறைந்த கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை பயன்பாடுகளைப் உபயோகிக்கச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்தச் செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நவனா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஹலோ உஜ்ஜீவன் செயலியானது, எட்டு பிராந்திய மொழிகளில் குரல்வழி மூலம் அணுகக் கூடியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்