ஹவ்சாலா – 2017 என்பது குழந்தை உரிமைகள் வாரம் ஆகும்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த குழந்தை உரிமைகள் வாரம் கொண்டாடப் படுகிறது.
இந்த ஒரு வாரத்தின் இடையே தேசிய குழந்தைகள் தினம் (நவம்பர் 14) மற்றும் சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் (நவம்பர் 20) கொண்டாடப்படுகிறது.
இந்த குழந்தை உரிமைகள் வாரத்தின் போது நடத்தப்பட உள்ள CCI திருவிழாவில் (CCI-Children Care Institutions) குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்களது திறமைகளை காட்சிப்படுத்த உள்ளனர். யுனிசெப் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்க உள்ளது.