TNPSC Thervupettagam

ஹாக்கி இந்தியா விருதுகள் 2023

April 5 , 2024 231 days 320 0
  • இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் ஆன ஹர்திக் சிங் மற்றும் சலிமா டெடே ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஆண்டின் சிறந்த ஹாக்கி நாயகர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • 6வது வருடாந்திர ஹாக்கி இந்தியா விருதுகளான இது ஒவ்வோர் ஆண்டின் சிறந்த இந்திய ஹாக்கி வீரர்களையும் கொண்டாடுகிறது.
  • முனிச் 1972 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக் குமாருக்கு, விளையாட்டுத் துறைக்கு ஆற்றியப் பங்களிப்பிற்காக அவரது தந்தை தியான் சந்த் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட ஹாக்கி இந்தியா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.
  • இதில் விருது பெற்ற மற்ற வீரர்கள் பின்வருமாறு:
    • ஆண்டின் சிறந்த கோல்கீப்பருக்கான ஹாக்கி இந்தியா பல்ஜித் சிங் விருது: P.R. ஸ்ரீஜேஷ்
    • ஹாக்கி இந்தியா பர்கத் சிங், ஆண்டின் சிறந்த டிஃப்பென்டர் (எதிரணியின் இலக்கினைத் தடுப்பவர்) விருது: ஹர்மன்பிரீத் சிங்
    • ஹாக்கி இந்தியா அஜீத் பால் சிங் சிறந்த மிட்ஃபீல்டருக்கான (நடு கள வீரர்) விருது: ஹர்திக் சிங்
    • ஹாக்கி இந்தியா தன்ராஜ் பிள்ளை சிறந்த முன் கள வீரர் விருது: அபிஷேக்
    • ஹாக்கி இந்தியா அசுந்தா லக்ரா விருது ஆண்டின் புகழ்பெற்று வரும் சிறந்த வீராங்கனைகளுக்கான விருது (மகளிர் - 21 வயதுக்குட்பட்டோர்): தீபிகா சோரெங்
    • ஹாக்கி இந்தியா ஜுக்ராஜ் சிங் விருது ஆண்டின் புகழ்பெற்று வரும் சிறந்த வீரருக்கான விருது (ஆடவர் - 21 வயதுக்குட்பட்டவர்கள்): ஆரைஜீத் சிங் ஹண்டால்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்