இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India - SAI) மற்றும் ஹாக்கி இந்தியா ஆகியவை நாடு முழுவதும் 7 இடங்களில் உயர் செயல்திறன் மையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்த உயர் செயல்திறன் கொண்ட 7 ஹாக்கி மையங்களானது கேலோ இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட இருக்கின்றது.
இந்த மையங்கள் இளம் ஹாக்கி வீரர்களுக்கானவை (14 முதல் 24 வயது வரை) ஆகும். இங்கு 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது.