ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கான ஊக்குவிப்புப் பாடல் வெளியிடப்பட்டது.
இந்தப் பாடல் பாலிவுட் பாடகரான மைக்கா சிங்கால் ஒடியா மொழியில் பாடப்பட்டது.
இந்தப் பாடலுக்கு “ஆஸா கரீபா போபால், ஒடிசா நா ஹீபா குளோபல்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சம்பல்புரி நடனத்துடன் ஒடிசி நடன அசைவுகள் ஆகிய சிறப்பம்சங்களும் இப்பாடலில் பொதிந்துள்ளன.
மேலும் இந்தப் பாடலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரான திலிப் திரிகே ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கு இசையமைப்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அம்மாநில அரசு தேர்வு செய்துள்ளது. பாலிவுட் கவிஞரான குல்சார் “ஜெய் ஹிந்த், ஜெய் இந்தியா” என்ற பாடலை எழுதியுள்ளார்.
ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் துவக்க விழா நவம்பர் 27-ல் நடைபெறவிருக்கிறது.