TNPSC Thervupettagam

ஹாங்கோர் ரக நீர்மூழ்கிக் கப்பல்

May 6 , 2024 74 days 124 0
  • பாகிஸ்தான் நாட்டிற்காக சீன நாட்டினால் கட்டமைக்கப்பட்ட முதல் ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 2028 ஆம் ஆண்டிற்குள் பாகிஸ்தான் கடற்படை தனது கடற்படையில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ள இந்த வகையைச் சேர்ந்த எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இதுவே முதலாவது ஆகும்.
  • ஹங்கோர்-வகை கப்பல் ஆனது, டீசல் மற்றும் மின்சார எரிபொருளில் இயங்கும் தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பலான சீனாவின் 039A யுவான் வகுப்பின் ஏற்றுமதிக்காக உருவாக்கப்படும் மாறுபாடாகும்.
  • இது பிரான்சு நாட்டின் ஸ்கார்பியன் ரகத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் நேரடி இணை வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்