அக்டோபர் 24 அன்று உலகின் நீளமான கடல் பாலமான ஹாங்காங் - சுஹாய் - மக்காவ் பாலம் போக்குவரத்திற்காக திறக்கப்படவிருக்கிறது.
55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலமானது பியர்ல் நதி கழிமுகத்தின் லிங்டிங்யாங் கரையில் அமைந்துள்ளது. இது உலகின் நீளமான கடல் பாலம் ஆகும்.
இது லிங்டிங்யாங் கால்வாயில் பரவியுள்ளது. இந்தப் பாலம் பியர்ல் நதி கழிமுககாங் மக்காவ் மற்றும் சுஹாய் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது.
ஹாங்காங் - சுஹாய் - மக்காவ் பாலமானது (HKZMB அல்லது HZMB - Hong Kong–Zhuhai–Macau Bridge) மூன்று கம்பிவடத்தாலான தொடர் பாலங்கள் மற்றும் கடலுக்கடியில் ஒரு சுரங்கம், 2 செயற்கைத் தீவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.