ஹான்லே ஆய்வகம் – துளிம சமிக்ஞைகள்
December 14 , 2024
8 days
91
- இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) அறிவியலாளர்கள், துளிம சமிக்ஞைகளை விண்வெளியில் செலுத்துவதற்கு உகந்த இடங்களை இந்தியாவில் கண்டறிந்துள்ளனர்.
- ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகம் (IAO) ஆனது, ஆய்வு செய்யப்பட்ட பல்வேறு தளங்களில் மிகக் குறைவான சமிக்ஞை இழப்பைக் கொண்டுள்ளது.
- இது அதன் மிகவும் வறண்டப் பருவநிலை மற்றும் குறைந்த வளிமண்டல நீராவி அளவு ஆகியவற்றின் காரணமாக இந்த இடம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- துளிம சமிக்ஞைகள் என்பது துளிம இயக்கவியலின் கொள்கைகளைப் பயன்படுத்தி அனுப்பப்படும் தகவலைக் குறிக்கிறது.
- துளிம இயக்கவியல் ஃபோட்டான்கள், எலக்ட்ரான்கள் அல்லது அணுக்கள் போன்ற மிகவும் சிறிய அளவுகளில் உள்ள பல துகள்களின் நடத்தையை / செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.
Post Views:
91