இத்திருவிழா நாகா சமூகத்தின் தனித்தன்மையையும், பூர்வீக பாரம்பரிய செறிவை பாதுகாக்கவும், புத்துணர்வளிக்கவும் கொண்டாடப்படுகின்றது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாகாலாந்தில் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவின் மிகப்பெரிய பூர்வீக திருவிழாக்களில் ஒன்றாகும்.
கம்பீரமும், எச்சரிக்கை விழிப்புத் தன்மையும் கொண்டதனால், நாகா மக்களால் மதிப்பளித்து போற்றப்படும் ஹார்ன்பில் பறவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.