சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே (Hauwei), ஹார்மோனிஓஎஸ் என்ற தனது சொந்த இயங்கு தள அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இது சீன மொழியில் ஹாங்மெங்ஓஎஸ் (HongmengOs) என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த இயங்கு தள அமைப்பு அனைவருக்கும் பொதுவானதாகும். இது புழக்கத்திற்கு வரவிருக்கும் கூகுளின் ஃப்யூஷியாவிற்குப் போட்டியாக விளங்கும்.
ஹானர் என்பது ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு திறன்பேசி வகையாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறியதற்காக ஹுவாவே நிறுவனமானது அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.