TNPSC Thervupettagam

ஹிந்தி மின்னஞ்சல் சேவை – ராஜஸ்தான்

December 14 , 2017 2575 days 919 0
  • நாட்டின் முதல் மாநிலமாக, மாநில குடிமக்களுக்கு ஹிந்தி மொழியில் இலவச மின்னஞ்சல் முகவரியை இராஜஸ்தான் மாநிலம் அளிக்க உள்ளது.
  • இதன்படி முதல் மின்னஞ்சல் முகவரி மாநில முதல்வரான திருமதி.வசுந்தரா ராஜே பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
  • ஒரு கோடிக்கும் மேலான மக்களின் பயன்பாட்டு பதிவை உடைய இராஜஸ்தானின் “ராஜஸ்தான் டிஜிகிட்“ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மின்னஞ்சல் சேவை துவக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “Data Mail” சேவை எனும் திட்டத்தின் மூலம் BSNL நிறுவனம் தன் அகலக் கற்றை (பிராட்பேண்ட்) பயன்பாட்டாளர்களுக்கு 8 இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரி சேவை திட்டத்தை துவங்கியது.
  • இருப்பினும் BSNL நிறுவனத்தின் இத்தகு திட்டம் போலல்லாமல், இராஜஸ்தான் அரசின் மின்னஞ்சல் முகவரி திட்டமானது அனைத்து இணைய பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்