ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்தில் அரசு கொண்டிருந்தப் பங்குகளில் மீதமுள்ள 29.5% பங்குகளை விற்பதற்குப் பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தில் வேதாந்தா குழுமத்தின் பங்கு 64.92% ஆகும்.
ஐடிசி குழுமத்தில் உள்ள அதன் 7.91% பங்குகளை விற்கவும் அரசுத் திட்டமிட்டுள்ளது.
2023 ஆம் நிதி ஆண்டிற்கான அரசின் முதலீட்டு விலக்கிற்கான இலக்கு 65,000 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.