செக் குடியரசில் நடைபெற்ற நோவே மெஸ்டோ நேட் மெட்டுஜி கிராண்ட் பிரிக்ஸில் இந்தியாவைச் சேர்ந்த ஹீமா தாஸ் மகளிருக்கான 400 மீட்டர் தொலைவை 52.09 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இது ஹீமா தாஸின் முதலாவது 400 மீட்டர் தங்கப் பதக்கமாகும்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இவர் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு இவர் ஜூலை மாதத்தில் மட்டும் 200 மீட்டர் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அதிவிரைவு தடகள வீராங்கனை ஆவார்.
போகேஸ்வர் பரூக்கிற்குப் பிறகு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற அசாமைச் சேர்ந்த 2-வது தடகள வீராங்கனை ஹீமா தாஸ் ஆவார்.