TNPSC Thervupettagam
March 19 , 2020 1586 days 613 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் INST (Institute of Nano Science and Technology – நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட ‘ஹீமோஸ்டாட்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • விபத்துக்களின் போது விரைவான இரத்த இழப்பைத் தடுப்பதற்காக ஸ்டார்ச் அடிப்படையிலான ‘ஹீமோஸ்டாட்’ ஆனது உருவாக்கப் பட்டுள்ளது. இது அதிகப் படியான திரவத்தை உடலிலிருந்து உறிஞ்சி, இரத்தத்தில் இயற்கையான உறைதலுக்கான தேவையான காரணிகளைக் குவிக்கின்றது.
  • இந்தப் பொருளானது உறிஞ்சுதல் திறன் அதிகரிப்பு, மேம்பட்ட உறிஞ்சுதல், விலை குறைவான மற்றும் மக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டது.
  • ஹீமோஸ்டாட்கள் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளாகும்.
  • நானோ அறிவியல் நிறுவனம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • இது தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம் அல்லது நானோ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்