மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் INST (Institute of Nano Science and Technology – நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட ‘ஹீமோஸ்டாட்’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
விபத்துக்களின் போது விரைவான இரத்த இழப்பைத் தடுப்பதற்காக ஸ்டார்ச் அடிப்படையிலான ‘ஹீமோஸ்டாட்’ ஆனது உருவாக்கப் பட்டுள்ளது. இது அதிகப் படியான திரவத்தை உடலிலிருந்து உறிஞ்சி, இரத்தத்தில் இயற்கையான உறைதலுக்கான தேவையான காரணிகளைக் குவிக்கின்றது.
இந்தப் பொருளானது உறிஞ்சுதல் திறன் அதிகரிப்பு, மேம்பட்ட உறிஞ்சுதல், விலை குறைவான மற்றும் மக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டது.
ஹீமோஸ்டாட்கள் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளாகும்.
நானோ அறிவியல் நிறுவனம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகின்றது.
இது தேசிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம் அல்லது நானோ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.