ஹீலியம் வாயு நிறைந்த வெப்பமிகு சார் நிலை குறுநட்சத்திரங்கள்
March 12 , 2024 258 days 216 0
ஒரு பெரிய சர்வதேச வானியலாளர்கள் குழுவானது, இன்று வரை அறியப்பட்ட மிகச் சிறிய நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளது.
மேலும், கூடுதலாக அது மற்றொரு சற்றே பெரிய நட்சத்திரத்துடன் இணையாக இருப்பதாகக் கண்டறியப் பட்டது.
இவை அவற்றின் மையக்கருவில் ஹீலிய வாயுவினை எரிக்கின்றன என்பதோடு, இவை பொதுவாக அண்ட நட்சத்திரக் குழுக்களில் காணப்படுகின்றன.
இந்த நட்சத்திரம் ஆனது J0526 எனப்படும் இரட்டை மண்டல அமைப்பின் ஒரு பகுதியாகும் என்ற நிலையில் இது பூமியிலிருந்து சுமார் 2,760 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
இதுவரை கண்டறியப்படாத இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு J0526A பெரிய வெண் குறுநட்சத்திரம் மற்றும் J0526B வெப்பமிகு சார்நிலைக் குறு நட்சத்திரம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
சிறிய நட்சத்திரம் ஆனது பூமியை விட தோராயமாக ஏழு மடங்கு பெரியது, அதாவது சனிக்கோளை விட சிறியது.
இது தோராயமாக 2,226 டிகிரி செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டு உள்ளது.
இது தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் பெரிய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
அதாவது இது சுமார் 72 ஆண்டுகளை ஒரு புவி நாளாக மாற்றுகிறது.
TMTS J0526B நடச்சத்திரத்திற்கு முன்னதாக, பூமியிலிருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள செந்நிற நட்சத்திரமான EBLM J0555-57Ab என்பது இதுவரை கண்டறியப்பட்ட மிகச்சிறிய நட்சத்திரங்களில் ஒன்றாகும்.