TNPSC Thervupettagam

ஹீலியோ இயற்பியல் திட்டங்கள்

January 19 , 2021 1411 days 666 0
  • நாசானது பூமிக்கு அருகில் விண்வெளிக் காலநிலையை இயக்கக் கூடிய சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தை ஆய்வு செய்வதற்காக வேண்டி 2 ஹீலியோ இயற்பியல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இவை ஒன்றிணைந்து, பின்வருவனவற்றிற்கு நாசாவின் பங்களிப்பானது சூரியன் மற்றும் பூமி ஆகியவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ள உதவ இருக்கின்றது.
    • வலுவான புற ஊதா உயர் உற்பத்தி ஒளிக்கதிர் ஆய்வுத் தொலைநோக்கி எப்சிலோன் திட்டம் (Extreme Ultraviolet High - Throughput Spectroscopic Telescope Epsilon Mission - EUVSAT)
    • செறிவு மின்னோட்ட சீமன்  உருவப் பட ஆய்வு  (Electrojet Zeeman Imaging Explorer - EZIE)

EUVST

  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமானது இதரப் பங்காளர்களுடன் இணைந்து EUVST எப்சிலோன் திட்டத்தை (சூரிய ஒளி சி - EUVST திட்டம்) முன்னெடுக்கின்றது.
  • இது 2026 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டி  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு சூரிய ஒளித் தொலைநோக்கியாகும்.

EZIE

  • இது 2024 ஆம் ஆண்டில் செலுத்தப்பட உள்ளது.
  • இது அரோராவை பூமியின் காந்த மண்டலத்துடன் இணைக்கும் பூமியின் வளிமண்லத்தில் உள்ள மின்னோட்டங்களைப் பற்றி ஆய்வு செய்யவுள்ளது.
  • காந்த மண்டலமானது சூரிய ஒளிச் செயல்பாடுகள் மற்றும் இதரக் கூறுகளுக்கு எதிர்வினையாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்