மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தையடுத்து ஹுக்கா விடுதி அல்லது ஹுக்கா விற்பனை செய்யும் இடங்களைத் தடை செய்த மூன்றாவது மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
இந்த தடையானது பஞ்சாப் சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த பின்னர் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு வடிவங்களில் புகையிலை பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யவும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதும் இந்த சட்டத்தின் குறிக்கோள்களாகும்.
குறிப்பு
பஞ்சாப் மாநில சட்டமன்றமானது சிகரெட் மற்றும் மற்ற புகையிலை தயாரிப்புகள் - பஞ்சாப் திருத்த மசோதா 2018 (விளம்பரத்திற்கான தடை, விற்பனை மற்றும் வணிகத்திற்கான ஒழுங்குமுறை, உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) என்ற மசோதாவை இவ்வருடத்தின் மார்ச் மாதத்தில் நிறைவேற்றியது.