இது "USTTAD" என்ற திட்டத்தின் கீழ் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியத் தயாரிப்புகளின் கண்காட்சியாகும்.
USTTAD (Upgrading the Skills and Training in Traditional Arts/Crafts for Development scheme) ஆனது “மேம்பாட்டுத் திட்டத்திற்கான பாரம்பரிய கலைகள்/கைவினைப் பொருள்கள் மீதான திறன்கள் மற்றும் பயிற்சியினை மேம்படுத்துதல்” என அழைக்கப்படுகின்றது.
சிறுபான்மையினச் சமூகங்களின் பாரம்பரியக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் பாரம்பரியக் கைவினைஞர்களின் திறனை வளர்ப்பதும் உலகளாவியச் சந்தையுடன் பாரம்பரிய திறன்களின் இணைப்புகளை நிறுவுவதும் இதன் நோக்கமாகும்.