TNPSC Thervupettagam

ஹுருன் அமைப்பின் உலக யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு 2024

April 14 , 2024 224 days 278 0
  • இந்தியாவில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்துள்ளது.
  • ஹுருன் அமைப்பின் 2024 ஆம் ஆண்டிற்கான உலக யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீட்டின் படி, கடந்த ஆண்டு 68 ஆக பதிவான யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்து தற்போது 67 ஆக உள்ளது.
  • உலகளவில் யூனிகார்ன் நிறுவனங்களுக்கான மூன்றாவது பெரிய மையம் என்ற நிலையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையில் இருந்து 37 அதிகரித்து, 703 யூனிகார்ன் நிறுவனங்களுடன் உலகப் பட்டியலில் அமெரிக்க நாடு முன்னணியில் உள்ளது என்ற நிலையில் 340 யூனிகார்ன் நிறுவனங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • ஐக்கியப் பேரரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
  • உலகின் யூனிகார்ன் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு ஆனது கடந்த ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையாக 5 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
  • ஸ்விகி மற்றும் டிரீம்11 ஆகியவை ஒவ்வொன்றும் 8 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவின் அதிக மதிப்பு மிக்க யூனிகார்ன் நிறுவனங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்