TNPSC Thervupettagam

ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை

March 31 , 2024 238 days 277 0
  • ஷாங்காய் நகரில் உள்ள ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, மும்பை நகரானது ஆசியாவின் செல்வந்தர்களின் தலைநகரான பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளியது.
  • மும்பை மாநகரானது சுமார் 92 செல்வந்தர்களுடன், நியூயார்க் (119) மற்றும் லண்டன் (97) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் மூன்றாவது செல்வந்தர்களின் தலைநகர் என்ற நிலையைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதாரம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 7.5% வளர்ச்சி அடைந்தது.
  • இதன் மூலம் 94 செல்வந்தர்கள் சேர்க்கப்பட்டதுடன், 2013 ஆம் ஆண்டு முதல் அதிக செல்வந்தர்கள் கொண்ட நகராக மாறியுள்ளது.
  • 814 செல்வந்தர்களுடன் சீனா இந்த அறிக்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • ஆனால் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 155 செல்வந்தர்களுடன், சீனா அதி உயர் பணக்காரர்களின் எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் 73 நாடுகளைச் சேர்ந்த 3,279 செல்வந்தர்கள் இடம் பெற்றதோடு, உலகளாவிய செல்வப் பரவலை இது எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்