TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா அமைப்பின் 35 வயதுக்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியல் 2024

October 2 , 2024 20 hrs 0 min 54 0
  • இஷா அம்பானி மற்றும் டாடில் நிறுவனத்தின் இணை நிறுவனர் பரிதா பரேக் ஆகியோர் 2024 ஆம் ஆண்டிற்கான ஹுருன் இந்தியா அமைப்பின் 35 வயதுக்குட்பட்ட தொழில்முனைவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இளம் பெண்கள் ஆவர்.
  • இந்தப் பட்டியலில் 35 வயதுக்குட்பட்ட 150 இந்திய தொழில்முனைவோர் இடம் பெற்று உள்ளனர்.
  • ஆகாஷ் அம்பானி மற்றும் மாமா எர்த் நிறுவனத்தின் கஜல் அலக் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • பிசிக்ஸ் வாலா நிறுவனத்தின் நிறுவனர் அலக் பாண்டே மற்றும் அஞ்சலி மெர்ச்சன்ட் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • ஷேர்சாட் இணை நிறுவனர் அங்குஷ் சச்தேவா இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இளம் நபர் ஆவார்.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தத் தொழில்முனைவோரில் சுமார் 82 சதவீதம் பேர் முதல் தலைமுறையினை சேர்ந்த வணிகத் தலைவர்கள் ஆவர்.
  • பெங்களூரு மற்றும் மும்பை ஆகியவை முறையே இந்தப் பட்டியலில் 29 மற்றும் 26 வணிகத் தலைவர்களைக் கொண்டு மிகவும் அதிக எண்ணிக்கையிலான தொழில் முனைவோரைக் கொண்ட நகரங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்