TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீடு 2023

January 15 , 2023 550 days 275 0
  • இலண்டனில் அமைந்துள்ள ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனமானது, உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை தரவரிசைப்படுத்தியதற்கான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் 199 வெவ்வேறு நாடுகளின் கடவுச் சீட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் இடம் பெற்றுள்ளன.
  • நுழைவு இசைவுச் சீட்டு இல்லா அணுகலில் 193 நாடுகளுடன் ஜப்பான் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • ஜப்பானிய கடவுச் சீட்டு ஆனது உலகின் அதிகாரம் வாய்ந்த கடவுச்சீட்டு என்ற தகுதியினைப் பெறுவது இது தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாகும்.
  • இந்தியா இக்குறியீட்டில் 85வது இடத்தைப் பிடித்துள்ளதோடு இது 59 நாடுகளுக்குப் பயணிப்பதற்கான நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத அணுகலைப் பெற்றுள்ளது.
  • பாகிஸ்தான் (32), சிரியா (30), ஈராக் (29), ஆப்கானிஸ்தான் (27) ஆகியவை இந்தக் குறியீட்டில் கடைசி 4 இடங்களைப் பெற்ற நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்