TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2022

July 23 , 2022 728 days 441 0
  • ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இந்தக் குறியீட்டில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
  • இப்பட்டியலில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது.
  • ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டானது 193 நாடுகளுக்கு நுழைவு இசைவு இன்றி பயணம் செய்வதற்கான அணுகலை வழங்குகிறது.
  • 144 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான அணுகலுடன் உக்ரைன் இந்தக் குறியீட்டில் 35வது இடத்தில் உள்ளது
  • 80 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான அணுகலுடன் சீனா 69வது இடத்தில் உள்ளது.
  • சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்தக் குறியீட்டின் கடைசி இடங்களில் உள்ளன.
  • ஆப்கானிஸ்தானின் கடவுச்சீட்டானது 27 நாடுகளுக்கு மட்டுமே அத்தகைய வசதி கொண்ட அணுகலை வழங்குகிறது.
  • சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் பிரத்தியேகத் தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீடானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் என்ற ஆய்வுக் குழுவினால் தயாரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்