TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2024

January 14 , 2024 187 days 246 0
  • பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசியாவின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • அதே சமயம், முந்தைய ஆண்டு 84வது இடத்தில் இருந்த இந்தியா தனது தர நிலையை மேம்படுத்தி 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணிக்கலாம்.
  • இந்தக் குறியீட்டில் பாகிஸ்தான் (101), ஈராக் (102), சிரியா (103) மற்றும் ஆப்கானிஸ்தான் (104) ஆகியவை தரவரிசையில் கடைசியாக உள்ளன.
  • இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளின் தரவரிசைகள்: மாலத்தீவுகள் (#58), சீனா (#62), பூட்டான் (#87), மியான்மர் (#92), இலங்கை (#96), வங்காளதேசம் (#97), மற்றும் நேபாளம் (#98) .
  • முதல் இடத்தில் உள்ள நாடுகளின் கடவுச் சீட்டினை வைத்திருப்பவர்கள் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.
  • இந்தக் குறியீட்டில் 104வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 28 நாடுகளுக்கு மட்டுமே நுழைவு இசைவுச் சீட்டின்றிப் பயணிக்க இயலும்.
  • இந்தக் குறியீடு ஆனது 227 நாடுகளையும், 199 கடவுச் சீட்டுகளையும் மதிப்பிட்டுத் தர வரிசைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்